தமிழ்நாடு முழுவதும் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்ற சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் பலரும் ஹெல்மெட் அணியாமல் பயணிப்பதாக குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் இருந்தது. இது தொடர்பான பொதுநல வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அரசு முறையாக அமல்படுத்தவில்லை என கண்டனம் தெரிவித்தது.
குறிப்பாக ஹெல்மெட் அணியாதவர்கள் ஓட்டுநர் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது எனவும், ஏன் வாகனத்தை பறிமுதல் செய்யகூடாது எனவும் நீதிமன்றம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் போக்குவரத்து போலிசார் ஹெல்மெட் அணியாதவர்கள் மீது தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.