கடந்த மே மாதம் இறுதியில் புதிய தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவு சமர்ப்பிக்கப்பட்டது. சமர்ப்பிக்கப்பட்ட நாள் முதல் பல்வேறு எதிர்ப்புகளை தேசிய கல்விக் கொள்கையின் வரைவு பெற்றுவருகிறது. சமீபத்தில் நடிகர் சூர்யாவும் தனது அதிருப்தியைப் பதிவு செய்தார்.
தேசிய கல்விக்கொள்கை - நான்கு மண்டலங்களில் கருத்துக் கேட்பு! - நடிகர் சூர்யா
சென்னை: புதிய கல்விக்கொள்கை குறித்து நான்கு மண்டலங்களில் பொதுமக்கள், துறை சார்ந்த நிபுணர்களின் கருத்துகள் கேட்கப்படவுள்ளன.
நான்கு மண்டலங்களில் கருத்துக் கேட்பு
இந்நிலையில், புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு குறித்து கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்களிடம் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் கருத்துகளைக் கேட்க முடிவு செய்துள்ளது. அதன்படி கோவை மண்டலத்தில் இன்றும் (17.7.2019), திருச்சி மண்டலத்தில் ஜூலை 19ஆம் தேதியும், மதுரை மண்டலத்தில் ஜூலை 22ஆம் தேதியும் சென்னை மண்டலத்தில் 24ஆம் தேதியும் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.
Last Updated : Jul 17, 2019, 2:11 PM IST