கொல்கத்தாவில் மருத்துவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து சென்னை ராயபுரம் ஸ்டான்லி மருத்துவமனையின் முன் இந்திய மருத்துவ சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனை பாதுகாப்பு சட்டம் கொண்டுவர வலியுறுத்தியும், மருத்துவர்கள் மீதான தாக்குதலை நடத்திய கும்பலை கைது செய்ய வேண்டும் எனவும் மருத்துவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மருத்துவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து தர்ணா போராட்டம்
சென்னை: கொல்கத்தாவில் மருத்துவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து ஸ்டான்லி மருத்துவமனையில் இந்திய மருத்துவ சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து இந்திய மருத்துவ சங்கத் தலைவர் ராஜா, அனைத்து வகையான சிகிச்சை அளித்தும் சில நேரங்களில் நோயாளிகள் இறந்து விடுகின்றனர். அதற்கு அவர்கள் உறவினர்கள் மருத்துவர்கள்தான் காரணம் என்று தவறான சூழலை உருவாக்கி, மருத்துவர்கள் மீது தாக்குதல் போன்ற வன்முறை சம்பவத்தில் ஈடுபடுகின்றனர் என்றார்.
மேலும் அவர், மேற்கு வங்காளத்தில் ஒரு மருத்துவர் மீது தலையில் தாக்கப்பட்ட அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டைப் போல இந்திய அளவிலும் மருத்துவமனைப் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும். மத்திய அரசு மருத்துவர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும், இல்லையெனில் மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டம் தொடரும் என்று கூறினார்.