தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெற்றி வாகை சூடினார் தயாநிதி மாறன்!

சென்னை: மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில்  போட்டியிட்ட திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் சாம் பாலைவிட‭ 1,99,244‬ வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

By

Published : May 23, 2019, 3:38 PM IST

தயாநிதி மாறன்

1966ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கும்பகோணத்தில் பிறந்தவர் தயாநிதிமாறன்(52). இவர் சென்னை, எழும்பூரிலுள்ள டான் பாஸ்கோ உயர்நிலைப் பள்ளியில் படித்தார். சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார். அமெரிக்காவின் ஹார்வர்டு பிஸினஸ் ஸ்கூலில் "ஓனர்/பிரசிடெண்ட் மேனேஜ்மென்ட் ப்ரோக்ராம்" படித்துள்ளர். மனைவி பெயர் பிரியா தயாநிதிமாறன். இந்தியாவின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொடர்புத் துறையின் மத்திய அமைச்சராக மே 26, 2004 முதல் மே 2007ஆம் ஆண்டுவரை பொறுப்பு வகித்தார்.

பின்னர் ஜவுளித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். திமுக உயர்நிலை செயல்திட்டக்குழுவில் உறுப்பினராகவும் உள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவர். இவர் மத்திய சென்னையில் இருந்து இரண்டு முறை மக்களவைக்கு திமுக சார்பில் தேர்வானவர்.

முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலிமாறனின் மகன். சன் குழுமத்தின் நிறுவன தலைவரும், இந்திய கோடீஸ்வரர்களில் ஒருவருமான கலாநிதிமாறன் இவரது மூத்த சகோதரர்.

தற்போது மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட இவர் 2,98,427 வாக்குகள் பெற்று, தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் சாம் பாலைவிட (99,183 வாக்குகள்)‭ 1,99,244‬ வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details