நடந்து முடிந்த 17ஆவது மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான பாஜக, தேமுதிக, பாமக கூட்டணி படுதோல்வி அடைந்தது. இக்கூட்டணியில் தேனி மக்களவைத் தொகுதியில் மட்டும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி. ரவீந்திரநாத் குமார் வெற்றிபெற்றார். விஜயகாந்த் மைத்துனர் சுதீஸ், ராமதாஸ் மகன் அன்புமணி உட்பட ஏனைய அனைவரும் தோல்வியையே தழுவினர்.
தேமுதிக மா.செ.க்களுடன் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனை! - தேமுதிக மாவட்ட செயலாளர்
சென்னை: மக்களவைத் தேர்தலுக்கு பிறகு தேமுதிக மாவட்டச் செயலாளர்களுடன் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனை நடத்திவருகிறார்.
இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்கு பிறகு தேமுதிக கட்சியின் நிர்வாகிகளுடனான முதல் கூட்டம் கோயம்பேடு அலுவலகத்தில் இன்று நடைபெறும் என கட்சித் தலைமை ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி, இன்று நடைபெற்றுவரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள அழகாபுரம் மோகன்ராஜ் உள்ளிட்ட 42 மாவட்ட நிர்வாகிகள் கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகம் வந்தனர்.
இதனையடுத்து, தேமுதிக மாவட்ட செயலாளர்களுடன் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனை நடத்திவருகிறார். இதில் மக்களவைத் தேர்தலில் தேமுதிக கூட்டணி தோல்வியடைந்த நிலையில், அக்கட்சியை வலுப்படுத்துவது பற்றி ஆலோசனை நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.