தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அக்னி நட்சத்திரம்' உஷார் - பேரிடர் மேலாண்மை ஆணையம் வழங்கும் அறிவுரைகள் - agni natchatram

சென்னை: அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ள நிலையில் அனல் காற்று வீசுவதால் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று  பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது.

அக்னி நட்சத்திரம்

By

Published : May 6, 2019, 7:14 PM IST

Updated : May 7, 2019, 7:39 AM IST

தமிழ்நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் கோடை வெயில் ஆரம்பமானது. தொடர்ந்து மார்ச், ஏப்ரல் மாதங்களில் சுட்டெரிக்கத் தொடங்கிய வெயில், தற்போது அக்னி நட்சத்திரம் ஆரம்பித்தவுடன் உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் பொதுமக்களுக்கு அறிவுரைகளை வழங்கியுள்ளது. இதுதொடர்பாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறியிருப்பதாவது, உடலியல் பாதிப்புகளையும் இதன் விளைவாக மரணத்தையும் ஏற்படுத்தக் கூடியவை வெப்ப அலைகள் (அனல் காற்று), வெப்ப வலிப்பு காரணமாக ஏற்படும் மரணம் அல்லது தீவிரமான நோயிலிருந்து தடுக்கவும் மற்றும் வெப்ப அலையின்போது ஏற்படும் தாக்கத்தினை குறைப்பதற்கும் பின்வரும் நடவடிக்கைகளை செய்யலாம்.

கடைப்பிடிக்க வேண்டியவைகள்:

  • பயணங்களின்போது உடன் தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும்.
  • தாகம் ஏற்படாவிட்டால் கூட போதுமான தண்ணீரை போதிய இடைவேளையில் பருகி வர வேண்டும்.
  • வெளியே வேலை செய்தால், தொப்பி அல்லது குடை பயன்படுத்தவும்.
  • இலகுவான, வெளிர்நிறமுடைய, தளர்வான நுண்ணியப் பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.
  • வெளியே அதிகமான வெப்பநிலை நிலவும்போது கடுமையான வேலைகள் மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே வேலை பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.

  • வெயிலுக்கு ஏற்ற உணவுகள்

எந்த மாதிரியான உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்ளலாம்?

  • உடலில் நீரிழப்பை ஏற்படுத்தக்கூடிய மதுபானம், தேநீர், காபி, கார்பனேற்றப்பட்ட பானங்களைத் தவிர்க்க வேண்டும்.
  • அதிக புரத சத்துள்ள உணவு, பழைய உணவுகளை தவிர்க்க வேண்டும்.
  • உடலில் நீர்ச்சத்து அதிகரிப்பதற்கு உதவும் வீட்டில் தயாரிக்கப்பட்ட லஸ்ஸி, அரிசி நீர், எலுமிச்சை சாறு, மோர், இளநீர், ஓ.ஆர்.எஸ். பயன்படுத்தலாம்.

இவ்வாறு பேரிடர் மேலாண்மை சார்பில் வழங்கப்பட்ட அறிவுரைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated : May 7, 2019, 7:39 AM IST

ABOUT THE AUTHOR

...view details