அமெரிக்காவில் நடந்த ‘தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட்’ இசை நிகழ்ச்சியில் சென்னையைச் சேர்ந்த சிறுவன் ரூ.7 கோடி பரிசினை வென்றுள்ளார். அதனை பாராட்டும் வகையில் அமமுக துணை பொதுச்செயலாளர் தினகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
'இசை' சிறுவனுக்கு தினகரன் வாழ்த்து! - dinakaran congratulates the worlds best winner
சென்னை: அமெரிக்காவில் நடந்த ‘தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட்’ இசை நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற சிறுவனுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
!['இசை' சிறுவனுக்கு தினகரன் வாழ்த்து!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/768-512-2689866-511-27b5311a-a450-48eb-b4b9-e4d4117ede12.jpg)
அதில், "அமெரிக்காவில் நடந்த ‘தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட்’ இசை நிகழ்ச்சியில் வென்று ரூ.7 கோடி பரிசினைப் பெற்றுள்ள சென்னையைச் சேர்ந்த சாதனைச் சிறுவன் லிடியன் நாதஸ்வரம் தமிழகத்திற்குப் பெருமை தேடித்தந்திருக்கிறார்.
13 வயதில் உலகளவில் பெரும் புகழை ஈட்டிருக்கிற அவர், இசை உலகில் இன்னும் பல உயரங்களை எட்டிப் பிடித்து நம் மண்ணுக்குப் பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன். லிடியனை இந்த உயரத்திற்கு அழைத்துச் சென்றிருக்கும் அவரது தந்தை சதீஷ் வர்ஷனுக்கும் வாழ்த்துகள். சதீஷ்தான் நம்முடைய புரட்சித்தலைவி அம்மா மறைந்த போது ‘வானே இடிந்ததம்மா…’ என்ற பாடல் மூலம் நம் கண்ணீர்ப்பெருக்கை அதிகப்படுத்தியவர்" என்று தெரிவித்துள்ளார்.