தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மக்களவைத் தேர்தல் - இயந்திரக் கோளாறால் பல்வேறு பகுதிகளில் வாக்குப்பதிவு தாமதம் - வாக்குப்பதிவு

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், ஏராளமான வாக்குச்சாவடிகளில் உரிய நேரத்தில் வாக்குப்பதிவு தொடங்காமல் தாமதம் ஏற்பட்டது.

இயந்திர கோளாறால் பல்வேறு பகுதிகளில் வாக்குப்பதிவு தாமதம்

By

Published : Apr 18, 2019, 3:16 PM IST

Updated : Apr 18, 2019, 3:40 PM IST

திருவள்ளூர்

இயந்திரப் பழுது ஏற்பட்டதால் 7.45 மணிக்கு வாக்குப்பதிவு தொடக்கம். 11 மணி வரை 31 விழுக்காடு வாக்குப்பதிவு

கடலூர்

இயந்திரக் கோளாறு, வாக்குச்சாவடி முகவர்கள் வருகை, மாதிரி வாக்குப்பதிவு பணிகள் செயல்பாடுகளில் ஏற்பட்ட தாமதம் காரணமாக 7.20 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 11 மணி வரை 28.56 விழுக்காடு வாக்குப்பதிவு ஆகியுள்ளது.

பண்ருட்டி அருகே திருவிதிகை வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு திடீர் நிறுத்தம். பரிசுப்பெட்டி சின்னம் அருகே வாக்களிக்க பட்டன் இல்லை என புகார்.

திண்டுக்கல்

இயந்திரக் கோளாறு காரணமாக பல்வேறு பகுதிகளில் 1.30 மணி நேரம் வரை வாக்குப்பதிவு தாமாதமாகியுள்ளது. வேடசந்தூர், ஒட்டன்சத்திரம் பகுதிகளில் 45 நிமிடம் தாமதாமானது. 11 மணி வரை 28.65 விழுக்காடு வாக்குப்பதிவு ஆகியுள்ளது. நிலக்கோட்டை சட்டப்பேரவை தொகுதியில் 21.8 விழுக்காடு வாக்குப்பதிவாகியுள்ளது.

ராமநாதபுரம்

பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கவில்லை எனக்கூறி ஏழு கிராம மக்கள் திருவாடானை பகுதியில் தேர்தலை புறக்கணிப்பு செய்தனர். பின்னர் தேர்தல் அலுவலருடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு இரண்டு கிராம மக்கள் வாக்களித்தனர். 11 மணி வரை 19.67 விழுக்காடு வாக்குப்பதிவு.

நாகப்பட்டினம்

ஐந்து வாக்குச்சாவடிகளில் ஒரு மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.

திருவாரூர்

முத்துப்பேட்டை பகுதியில் மூன்று வாக்குச்சாவடிகளில் இரண்டு மணி நேரம் தாமதம். திருவாரூர் பகுதியில் அமுமுகவுக்கு வாக்களிக்க வந்த கர்ப்பிணி பெண் மீது அதிமுகவினர் தாக்குதல்.

கரூர்

வாக்குப்பதிவு இயந்திரம் பழுதால் கரூர் மாவட்டம் காமராஜர் கடைவீதி அருகில் இருக்கக்கூடிய மாரியம்மன் கோவில் தெரு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வாக்குச்சாவடியில் ஒரு மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.

சிவகங்கை

காரைக்குடி அருகே கூத்தலூர் 19ஆவது வாக்குச்சாவடி மற்றும் தீக்குரணி பகுதியில் இயந்திரக் கோளாறு காரணமாக காலை 11 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவில்லை.

தேனி

பெரியகுளம் தென்கரை பகுதியில் ஒரு மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடக்கம்.

தூத்துக்குடி

கூட்டாம்புளி, போல்போட்டை 46ஆவது வாக்குச்சாவடி, சிதம்பர நகரில் ஒரு மணி நேரம் தாமதம்.

புதுக்கோட்டை

அறந்தாங்கி அருகே பல பகுதிகளில் வாக்குப்பதிவின்போது இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதனால் வாக்குப்பதிவு சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்ட பின் தொடக்கம். இதேபோல் தீயத்தூரிலும் ஒரு மணி நேரம் தாமதம் ஏற்பட்டது.

திருநெல்வயல் பகுதியில் 7.30 மணியிலிருந்து வாக்குப்பதிவு தொடக்கம்.

திருப்பூர்

பல்லடம் பகுதியில் மின் மயானம் அமைப்புக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இதன் காரணமாக ஐந்து மணி நேரம் தாமதமாக 12 மணியளவில் வாக்குப்பதிவு தொடக்கம். முருகம்பாளையம் பகுதியில் அதிமுக வேட்பாளர் வாக்களிக்கும்போது அவரது ஆதரவாளர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினரிடையே வாக்குவாதம் நிகழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தருமபுரி

அரூர் அருகே தென்கரைக்கோட்டை பகுதியில் இயந்திரக் கோளாறால் 2.30 நேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடக்கம்.

நாமக்கல்

இயந்திரக் கோளாறால் இரண்டு வாக்குச்சாவடிகளில் 20 நிமிடம் தாமதமாக வாக்குப்பதிவு தொடக்கம். நாமக்கல்லில் ஒரு வாக்குச்சாவடியில் 30 நிமிடம் தாமதமாக தொடக்கம். கொல்லிமலை அருகே சாலை வசதி செய்து தரவில்லை என கிராமத்தினர் கறுப்புக்கொடி கட்டி தேர்தலை புறக்கணித்தனர்.

Last Updated : Apr 18, 2019, 3:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details