தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நம்மாழ்வார் அமைப்பின் போராட்டத்திற்கு சிபிஐ ஆதரவு! - ஹைட்ரோ கார்பன் திட்டம்

சென்னை: நாம்மாழ்வார் கட்டமைத்த 'பேரழிப்பிற்கு எதிரான இயக்கம்' சார்பில் ஜூன் 12ஆம் தேதி நடத்தப்படும் மனித சங்கிலிப் போராட்டத்துக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவளிக்கும் எனத் தெரிவித்துள்ளது.

நம்மாழ்வார்

By

Published : Jun 8, 2019, 6:30 PM IST

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “நம்மாழ்வாரால் தொடங்கப்பட்ட 'பேரழிப்பிற்கு எதிரான இயக்கம்' சார்பில், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகவும், இத்திட்டத்தினை மத்திய அரசு கைவிடக் கோரியும், ஜூன் மாதம் 12 ஆம் நாள் மாலை 5.30 மணி முதல் 6.00 மணிவரை மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்திடத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி , கடந்த ஒரு மாதம் காலமாக, விழுப்புரம், நாகை, திருவாரூர், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் நடத்தி வருகிறது. இந்த திட்டம் கைவிடப்படும் வரை போராட்டம் தொடர்ந்து நடைபெறும். ஜூன் 12இல் நடத்தப்பட உள்ள மனிதச் சங்கிலிப் போராட்டத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details