பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பாலியல் தொல்லை செய்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது, சிபிசிஐடி காவல்துறையினர் நேற்று முதல் பொள்ளாச்சி முகாமிட்டு பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியாக அறியப்படும் திருநாவுக்கரசை சிபிசிஐடி காவலில் வைத்து விசாரிக்க கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.