சென்னை பெருங்குடியில் வசித்து வருபவர் பிரபாகரன். இவர் ஓட்டிநராகவும், இவரது மனைவி தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர். இந்நிலையில் தனது மனைவியுடன் காவல் ஆணையர் அலுவலகம் வந்த பிரபாகரன், மர்ம நபர் ஒருவர் தனது மனைவியின் புகைப்படத்தை முகநூலில் இருந்து எடுத்து அதை ஆபாசமாக மார்ஃபிங் செய்து தங்களை மிரட்டுவதாக புகார் அளித்தார்.
முகநூலில் ஆபாசமாக மார்ஃபிங் செய்து புகைப்படம் பதிவு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை - fb marphing photo
சென்னை: முகநூலில் புகைப்படத்தை ஆபாசமாக மார்ஃபிங் செய்து பதிவிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க, தம்பதிகள் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரபாகரன், அம்சத் பேகன் என்ற ஒரு பொய்யான கணக்கில் இருந்து மர்ம நபர் ஒருவர் தன் மனைவின் புகைப்படத்தை ஆபாசமாக மார்ஃபிங் செய்து தனக்கும் தனது மனைவிக்கும் அனுப்பி, அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டு விடுவேன் எனக்கூறி தங்களை மிரட்டுவதாக தெரிவித்தார்.
மேலும், அந்த மர்ம நபர் இதுபோல் பல பெண்களின் புகைப்படங்களை மார்ஃப் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளதாகவும், , தங்களை போல் வேறு யாரும் பாதிக்கப்படக்கூடாது என்ற காரணத்தாலேயே இந்த புகாரை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்திருப்பதாகவும், விரைவில் இதற்கு காவல்துறை முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.