தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'குடிநீர் பிரச்னையை தீர்க்க அரசிடம் திட்டம் இல்லை..!' - கே.ஆர்.ராமசாமி குற்றச்சாட்டு - chennai water issue

சென்னை: "குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண அரசிடம் எந்தவிதமான திட்டங்களும் இல்லை. கண்துடைப்புக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி பிரச்னையை திசை திருப்புகிறது" என்று, காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் கே.ஆர்.ராமசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

கே.ஆர்.ராமசாமி

By

Published : Jul 1, 2019, 11:07 PM IST

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

குடிநீர் பிரச்சனைக்காக நிரந்தர தீர்வு காண தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது சென்னையில் குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் ஒத்திவைப்பு தீர்மானத்தை சபாநாயகரிடம் கொடுத்திருந்தோம். நாங்கள் ஒருநாள் சட்டமன்றத்தை முழுமையாக குடி தண்ணீர் பிரச்சனைக்காக ஒத்தி வைக்க வேண்டும் என்று கூறினோம்.அதற்கு சபாநாயகர் அனுமதியளிக்கவில்லை.

குடி தண்ணீர் பிரச்னையை பொறுத்தமட்டில் இந்த அரசிடம் நிரந்தர தீர்வு காண திட்டங்கள் இல்லை. சட்டமன்றம் கூடுகிறது என்பதற்காக நான்கு நாள்களுக்கு முன்பு கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார். ஆனால் அதை தமிழ்நாடு முழுவதும் கொண்டு வர வேண்டும் என்று கூறினால் அதற்கு அவர் ஒத்துவரவில்லை.

காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி பேட்டி

மழைக்காலங்களில் காவிரியில் வீணாக கலக்கக் கூடிய நீரை சேமிக்க அணைகள் கட்டவும், இந்த அரசு முன் வரவில்லை. பெருந்தலைவர் காமராஜர் காலத்திற்கு பிறகு புதிதாக அணைகள் எதுவும் கட்டவில்லை. இம்மாதிரியான சிறப்பான திட்டங்களை கொண்டு வர சொன்னால் வேறு திட்டங்களை காட்டி திசை திருப்புகின்றனர்", என்றார்.

ABOUT THE AUTHOR

...view details