தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிரபல ஐடி நிறுவனமான காக்னிசன்ட் வழக்கு: தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்! - Cognisant tax exemption

சென்னை: வருமான வரித்துறையின் நோட்டீசுக்கு தடை விதிக்க கோரி பிரபல ஐடி நிறுவனமான காக்னிசன்ட் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Cognisant tax exemption petition dismissed

By

Published : Jun 25, 2019, 6:29 PM IST

Updated : Jun 25, 2019, 7:53 PM IST

பிரபல ஐடி நிறுவனமான காக்னிசன்ட் (Cognizant) நிறுவனம் கடந்த 2014ஆம் ஆண்டு வெளிநாட்டு பங்குதாரர்களிடம் இருந்து, பங்குகளைத் திரும்பப் பெற்றது. சுமார் 19 ஆயிரத்து 415 கோடி மதிப்பிலான 94 லட்சத்து 543 பங்குகளை திரும்பப் பெற்றது.

இதற்கு உரிய வரியான ரூ. 2,912 கோடியை கட்டவேண்டும் என்று வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து காக்னிசன்ட் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கல்யாணசுந்தரம், வருமான வரித்துறையின் தீர்ப்பாயம் உள்ளிட்டவற்றை அணுகாமல் நேரடியாக நீதிமன்றத்தை அணுக முடியாது எனக்கூறி வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Last Updated : Jun 25, 2019, 7:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details