ஜெகனுக்கு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் பழனிசாமி! - andra cm
சென்னை: ஆந்திராவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட ஜெகன் மோகன் ரெட்டிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆந்திராவின் புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்றுக் கொண்டுள்ள ஜெகன் மோகன் ரெட்டிக்கு தமிழ்நாடு சார்பாகவும், என்னுடைய சார்பாகவும் வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன். தந்தையை போல ஆந்திர மக்களுக்கு சேவை செய்வீர்கள் என்று நம்புகிறேன். தமிழ்நாடும் ஆந்திராவும் கலாச்சாரம், பொருளாதார ரீதியாக நெருக்கமான உறவுகளை பல நூற்றாண்டுகளாக கொண்டுள்ளது. இதன் மூலம் வரும் நாட்களில் நமது மக்கள் பயனடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.