சென்னையில் நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டத்தில், அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் உயர் காவல்துறை அதிகாரிகளும் கலந்துகொள்ள உள்ளனர். 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்கள் குறித்தும், அண்மையில் காலியான சூலூர் உள்ளிட்ட நான்கு சட்டமன்ற இடைத்தேர்தல்களை நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.
ஏப்ரல் 2, 3 தேதிகளில் அனைத்துகட்சி கூட்டம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு - Election commission
சென்னை: இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் ஏப்ரல் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் தமிழக அரசியல் கட்சி தலைவர்களுடன் விரிவான ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
சுனில் அரோரா
மேலும், இந்தியாவிலேயே அதிக அளவில் தமிழகத்தில் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்தும், தேர்தல் நடத்தை விதிமுறைகளை தீவிரமாக கடைபிடிக்கப்படுவது குறித்தும் விரிவான ஆலோசனை இக்கூட்டத்தில் நடத்தப்படும் எனத் தெரிகிறது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் சுனில் அரோர விரிவான செய்தியாளர் சந்திப்பும் மேற்கொள்ள உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.