.
பள்ளி மாணவர்களிடையே மோதல்; வேடிக்கை பார்த்த மக்கள்! காணொலி - பள்ளி மாணவர்களிடையே கடும் மோதல்
சென்னை: கே.கே. நகர், அசோக் பில்லர் பேருந்து நிறுத்தம் அருகே இரு பள்ளி மாணவர்கள் கட்டிப் புரண்டு சண்டையிட்டுக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை கேகேநகர் செல்லக்கூடிய வழியில் உள்ள அசோக்பில்லர் பேருந்து நிறுத்தத்தில் கட்டிப்புரண்டு பள்ளி மாணவர் இருவர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்தக் காட்சிகளில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும்போது சுற்றி பல மாணவர்கள் இருந்தும் அதனை தடுக்காமல் வேடிக்கை பார்த்து நின்றனர். இது குறித்து விசாரணை எடுக்கப்பட்டதா என்பன குறித்த தகவல்கள், மாநகர காவல்துறை வட்டாரத் தரப்பிலிருந்து இன்னும் தெரிவிக்கப்படவில்லை.