சென்னையில் குற்றங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதைத் தடுக்க காவல்துறையினர் தொடர்ந்து குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதில் ஒரு பகுதியாக குற்றவாளிகளை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கீழ் கைது செய்து சிறையில் அடைத்து குற்றத்தை கட்டுப்படுத்தி வருகின்றனர்.
குண்டர் சட்டத்தில் 4 ரவுடிகள் கைது - police action
சென்னை: சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் குற்றங்களை தடுப்பதற்காக நான்கு ரவுடிகளை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
ரவுடிகள் பதட்டம்
இதையடுத்து, எம்ஜிஆர் நகரை சேர்ந்த பிரதாப் குமார் (24), போரூரை சேர்ந்த பார்த்திபன் (22), சாத்தான் காடு பகுதியை சேர்ந்த டில்லிப்பாபு(22), பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஜெங்சிங்(42) என்ற நான்கு பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து உள்ளனர். இவர்கள் மேல் ஏற்கனவே கொலை முயற்சி, வழிப்பறி, அடிதடி உட்பட பல வழக்குகள் உள்ளதால் காவல் துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.