சென்னை அம்பத்தூர் அடுத்த ஓரகடம் எஸ்.வி.நகர் பெருமாள் கோவில் தெருவில் வசித்துவந்தவர் சுமதி (38). இவரது கணவர் மூர்த்தி (44). இவர் பூந்தமல்லி அடுத்த மலையம்பாக்கம் கிராமத்தில் வசித்துவருகிறார். தனியார் நிறுவன ஊழியர். இத்தம்பதிக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.
இதற்கிடையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுமதி பிரிந்து வாழ்ந்துவந்தார். பின்னர் அவர் அம்பத்தூரில் தனது பெற்றோர் வீட்டில் தஞ்சம் அடைந்தார். இவருடன் இரண்டு மகன்களும் சென்றுவிட்டனர். ஒரு மகள் மட்டும் தந்தையுடன் வசித்துவருகிறார்.
இந்நிலையில் கணவர் மூர்த்தியை பார்த்துவிட்டு வருவதாக வீட்டில் இருந்து சென்ற சுமதி, காணவில்லை. இது குறித்து மூர்த்தியிடம் கேட்டதற்கு முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். இதில் சந்தேகமடைந்த மகன்கள் தங்களது தாய்காணவில்லை என காவல் துறையில் புகார் அளித்துள்ளனர்.