பராமரிப்புப் பணி காரணமாகச் சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே செல்லும் மின்சார தொடர்வண்டிச் சேவையில் நாளை மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, கடற்கரையில் இருந்து வேளச்சேரி நோக்கி செல்லும் தொடர்வண்டிச் சேவை காலை 8 மணி முதல் பிற்பகல் 1.40 மணி வரை நிறுத்தப்படுகிறது.
பெருநகர தொடர்வண்டி சேவை நாளை நிறுத்தம்!
சென்னை: பராமரிப்புப் பணி காரணமாக சென்னைக் கடற்கரை–வேளச்சேரி இடையே காலை 7.50 மணி முதல் பிற்பகல் 2.35 மணி வரை மின்சார தொடர்வண்டி சேவை நிறுத்தப்படவுள்ளது.
இந்த வழித்தடத்தில் பராமரிப்புக்குப் பின்னரான பிற்பகல் 2 மணிக்குச் சேவை தொடங்கப்படும் என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
அதேபோன்று மறு மார்க்கத்தில் காலை 8.10 மணி முதல் பிற்பகல் 1.50 மணி வரையிலும் மின்சார தொடர்வண்டிச் சேவை நிறுத்தப்படுகிறது. இந்த வழித்தடத்தில் பராமரிப்புக்குப் பின்னரான பிற்பகல் 2.10 மணிக்குச் சேவை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இரு வழித்தடத்திலும் மொத்தமாக 38 ரயில்களின் சேவைகள் நிறுத்தப்படுவதாக தொிவிக்கப்பட்டுள்ளது.