தமிழக தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாஹூ பத்திரிக்கையாளர் சந்திப்பு உரையின் சிறப்பம்சங்கள்,
- மொத்த வாக்காளர்கள் 5.99 கோடி பேர் உள்ளனர்.
- வாக்காளர் அடையாள அட்டைகள் 14 லட்சத்திற்கும் அதிகமானவை புதிதாக சேர்கப்பட்டுள்ளன.
- வாக்கு சீட்டுகள் அனைவருக்கும் வழங்கப்படும். இருப்பினும், 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்று வைத்துக்கொண்டு வாக்களிக்க வேண்டும்.
- 7 அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள் உள்ளன.
- இதுவரை 127.66 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
- 60 கோடி வருமான வரித்துறையால் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
- ரூ.3.48 கோடி நேற்று மட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
- ரூ.62.24 கோடி பணம் சரியான ஆவணங்கள் காட்டப்பட்டதால் திரும்ப வழங்கப்பட்டுள்ளது.
- 284 கோடி மதிப்புள்ள தங்கம் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
- 4185 வழக்குகள் தேர்தல் விதிமுறைகள் மீறல் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
- 1,50,302 வாக்கு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.
- 89,160 வாக்கு துணை இயந்திரங்கள் உள்ளன.
- 67720 மொத்த வாக்கு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
- பதட்டமானதாக 7718 வாக்கு மையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
- சிவில் அதிகாரிகள் உள்பட 4 லட்சத்திற்கும் அதிகமானோர் பணியில் உள்ளனர்.
- 2,085 புகார்கள் இதுவரை சீ விஜில் செயலி மூலம் வந்துள்ளது. அதில் 899 புகார்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
- பொதுமக்கள் தங்கள் புகார்களை 1950 எண்ணில் 24 மணி நேரமும் தெரிவிக்கலாம்.
- 1,48,788 புகார்கள் இதுவரை 1950 எண்ணில் வந்துள்ளன.
- தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக அரசியல் கட்சிகள் மீது இதுவரை 93 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
- தேர்தல் நாள் அன்று பத்திரிகைகளில் எந்த அரசியல் தொடர்பான நிகழ்வுகளும் வெளியிடக்கூடாது.
- வாக்கு மையத்திலிருந்து 200 மீட்டர் தூரம் வரை அரசியல் தொடர்பான எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளக் கூடாது.
- வாக்கு மையங்களில் யாரும் கைபேசிகள் எடுத்துச் செல்லக்கூடாது.
- இ.வி.எம் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டால், சரி செய்வதற்காக 20% இயந்திரங்கள் கையிருப்பில் உள்ளன.