நாடு முழுவதிலும் காற்று மாசு பரவலாக அதிகரித்து வருகிறது. இதனைக் குறைக்க அரசு பல முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. இதன் ஒரு அங்கமாக மின்சார வாகன உற்பத்தியை ஊக்குவிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதன்படி வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மின்சார வாகனம் உதிரி பாகங்களுக்கான வரியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாதியாகக் குறைத்தது.
மின்சார வாகனங்களுக்கு சலுகை அளிக்க மத்திய அரசு முடிவு!
டெல்லி: மின்சார வாகனங்களுக்கான பதிவு கட்டணத்தை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மின்சார வாகனம்
இந்நிலையில் அத்தகைய வாகனங்களுக்கான பதிவுக் கட்டணத்தையும் குறைக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட மின்சார வாகனங்களுக்கான பதிவைப் புதுப்பிக்கும்போது அதற்கான கட்டணத்தை முழுமையாக ரத்து செய்யவும் வரைவு அறிக்கையைத் தயார் செய்த மத்திய அரசு அதை அரசிதழில் வெளியிட்டுள்ளது.