காவிரி நதி நீரை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பகிர்ந்துகொள்வதற்காக, காவிரி மேலாண்மை ஆணையத்தையும், ஒழுங்காற்றுக் குழுவையும் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மத்திய அரசு அமைத்தது. இவ்விரு அமைப்புகளுக்கும் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களும் தங்கள் உறுப்பினர்களை நியமித்தனர்.
ஆனால் காவிரி மேலாண்மை ஆணையம் கடைசியாக 2018 டிசம்பர் 3ஆம் தேதி கூடி ஆலோசனை நடத்தியது. ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம் ஆகஸ்ட் 9ஆம் தேதி நடந்தது. ஆனால் இந்த ஆண்டுக்கான காவிரி ஆணையமும், ஒழுங்காற்றுக் கூட்டமும் ஒருமுறை கூட நடத்தப்படவில்லை.
இதனிடையே, குறுவை சாகுபடிக்காக வரும் ஜூன் 12ஆம் தேதி காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். ஆனால் ஆணையம் இதைபற்றி எந்த உத்தரவையும் வெளியிடவில்லை என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.