தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல்ப் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நேரத்திற்கு முன் வேட்பாளர்கள் தங்களின் பரப்புரையை முடித்துக் கொள்ள வேண்டும் என்ற விதி அமலில் இருக்கிறது.
மத்திய சென்னை பாமக வேட்பாளர் சாம்பால் மீது வழக்கு பதிவு - sampaul
சென்னை: பரப்புரைக்கு கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதாக தேர்தல் அதிகாரி அளித்த புகாரின் பேரில் எழும்பூர் காவல்துறையினர் மத்திய சென்னை பாமக வேட்பாளர் சாம்பால் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மத்திய சென்னை பாமக வேட்பாளர் சாம்பால்
இந்நிலையில், மத்தியச் சென்னை பாமக வேட்பாளராக சாம்பால் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார். நேற்று சென்னை எழும்பூர் பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். ஆனால் தேர்தல் விதிமுறைக்கு எதிராக கூடுதல் நேரம் எடுத்து பரப்புரை செய்ததால், அவர் மீது தேர்தல் அதிகாரி அளித்த புகாரின் பேரில் எழும்பூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.