தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்டாலின் மருமகன் சபரீசன் மீது வழக்குப்பதிவு..! - dmk

சென்னை: திமுக தலைவர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் மீது சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

sabareesan dmk

By

Published : Mar 14, 2019, 7:51 PM IST

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் துணை சபாநாயகரும், அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவருமான பொள்ளாச்சி ஜெயராமனின் இரு மகன்களும் நேரடியாக சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் தனக்கும் தன் மகன்களுக்கும் தொடர்பில்லை என பொள்ளாச்சி ஜெயராமன் திட்டவட்டமாக மறுத்த போதிலும், இது தொடர்பாக சமூகவலைதளங்களில் பல கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.

இந்த நிலையில், தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த திமுக முயற்சிப்பதாக ஸ்டாலின் மருமகன் சபரீசன் மீது பொள்ளாச்சி ஜெயராமன் புகார் கொடுத்திருந்தார்.

அந்த புகாரை ஏற்றுக் கொண்ட சென்னை போலீசார், சபரீசன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details