தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்! - strike come to an end

சென்னை: இன்று காலை ஊதியம் தொடர்பாக போக்குவரத்து ஊழியர்கள் ஈடுபட்டு வந்த வேலை நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்!

By

Published : Jul 1, 2019, 12:49 PM IST

Updated : Jul 1, 2019, 3:55 PM IST

ஜூன் மாதத்திற்கான ஊதியத்தில் 62 விழுக்காடுதான் வழங்கப்படும் என வந்த தகவலையடுத்து இன்று காலை போக்குவரத்துத் துறையினர் திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் சிஐடியு, எல்பிஎப், ஹெச்எம்எஸ் உள்ளிட்ட போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சென்னை பல்லவன் இல்லத்தில் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

ஆலோசனையின் முடிவில் இன்று மாலைக்குள் அனைத்து ஊழியர்களுக்குமான ஊதியம் முழுமையாக அளிக்கப்படும் என்று போக்குவரத்துத் துறையினர் உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டம் உடனடியாக முடிவுக்கு வருவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட உழியர்கள் மீது ஒழுங்கீன நடவடிக்கை எடுத்தால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்றும் தொரிவித்தனர்.

போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்

வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கும்வரை போக்குவரத்து துறை சார்பாக யாரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட முன் வரவில்லை என்றும், அதனால் வேறு வழியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தொமுச பொருளாளர் நடராஜன் தெரிவித்தார்.

Last Updated : Jul 1, 2019, 3:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details