தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பணம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றமாகவே கருதப்படும் - சத்தியபிரதா சாஹு - தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி

சென்னை: பணம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றமாகவே கருதப்படும் என்று தமிழ்நாடுத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹு செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

சத்தியபிரதா சாஹு

By

Published : Apr 13, 2019, 4:59 PM IST

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ பத்திரிக்கையாளர் சந்திப்பின் சில துளிகள்;

  • தேர்தல் பணிகளுக்காக 5874 மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்
  • 7226 பதற்றமான வாக்கு மையங்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
  • நேற்று விருதுநகரில் 59 லட்சமும் கோவையில் 20 லட்சம் பணம் அதிகபட்சமாகப் பறிமுதல்.
  • 129.504 கோடி பணம் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
  • 991கிலோ தங்கம், 611 கிலோ வெள்ளி இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
  • 34.80 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்களும், 37.34 லட்சம் போதைப் பொருட்கள் பறிமுதல். செய்யப்பட்டுள்ளது.
  • சேலை உள்ளிட்டவை 7.81 கோடி மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
  • 19655 ஆயுதங்கள் இதுவரை ஒப்படைக்கப்பட்டுள்ளது.
  • புதியதாக 12லட்சத்து 12ஆயிரத்து 550 முதல் தலைமுறை வாக்காளர்கள் உள்ளனர்.
  • 5கோடியே 98லட்சத்து 69ஆயிரத்து 758 மொத்த வாக்காளர்கள் தமிழகத்தில் இத்தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.
  • 40.10 கோடி பணம் வருமானவரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
  • வேலூர் தொடர்பாக அறிக்கை அனுப்பிவிட்டு ஆணையம் எடுக்கும் முடிவிற்காகக் காத்திருக்கிறோம்.
  • பணம் பட்டுவாடா செய்யும் போது அதனை வாங்குபவர்கள் மீதும், வழக்குப் பதிவு செய்யப்படும்.
  • அடையாள அட்டை வைத்திருக்கும் பத்திரிக்கையாளர்கள், வாக்கு மையங்களில் வாக்கு யாருக்கு அளிக்கப்படுகிறது என்பதைத் தவிர மற்ற காட்சிகளைப் படம்பிடித்துக் கொள்ளலாம்.

என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details