மக்களைத்தேர்தல் தொடர்பாக உயர் மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தில்இந்திய தேர்தல் ஆணையர்கள் சுஷில் சந்திரா, அசோக் லவாசா, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் அசோக் லவாசா பேசுகையில், "அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள், உயர் காவல்துறை மற்றும் மாவட்ட ஆட்சியர்களை சந்தித்து ஆலோசித்தோம். ரிசர்வ் வங்கி, வருமானவரித்துறைஉள்ளிட்ட அனைத்து தரப்பு அதிகாரிகளிடமும் ஆலோசனை நடத்தினோம்.பணப்பட்டுவாடாவை தடுக்க நடவடிக்கைகள் எடுப்பதுடன் அதில் ஈடுபடுபவர்களை தண்டிக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன. விரைவில் நான்குதொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து அறிவிப்பு வெளியாகும்.
பணப்பட்டுவாடாவை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கும் வகையில் அனைத்து தரப்பிலும் சோதனைகள் வலுப்படுத்தப்படும். ஒரு தொகுதிக்கு 2 செலவின கணக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.சிவிஜில் செயலி மூலம் அனைவரும் வீடியோ, போட்டோக்கள் விதிமீறல்கள் தொடர்பாக அனுப்பலாம். அதன் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும். செயலி மூலம் இதுவரை 3 ஆயிரத்து 733 புகார்கள் வரப்பெற்றுள்ளது. அதன் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வாக்காளர்கள் ஏற்கனவே கூறப்பட்டுள்ள 12 ஆவணங்களில் ஒன்றை காட்டி மட்டுமே வாக்களிக்க முடியும். பூத் ஸ்லிப்பை வைத்து இம்முறை வாக்களிக்க இயலாது.
அனைத்து வாக்குச்சாவடிகளும் வி.வி.பாட் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்கு மையங்களிலும் பெண் அதிகாரிகள்நிச்சயமாக இருக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பணம் பறிமுதல் தொடர்பான விசாரணையில் குற்றம் உறுதி செய்யப்பட்டால், உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும். வேட்பாளர் கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்று இருந்தால், அது தொடர்பாக அனைத்து விபரங்களும் இணையத்தில் வெளியிடப்படும். குக்கர் சின்னம் தொடர்பாக சட்ட விதிகள் படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக இங்கு பேச முடியாது"எனக் கூறியுள்ளார்.