தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதிய கல்விக் கொள்கை, அனைவருக்கும் சமமானது - தமிழிசை - தமிழிசை சென்னை விமான நிலையத்தில் பேட்டி

சென்னை: மத்திய அரசால் செயல்படுத்தப்படும் புதிய கல்விக் கொள்கை, அனைத்து மாணவர்களுக்கும் சமமானது என, தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன்

By

Published : Jul 16, 2019, 7:33 AM IST

இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், “புதிய கல்விக் கொள்கை என்பது அனைவருக்கும் சமமான கல்விக் கொள்கை ஆகும். ஆனால் இதை வேண்டுமென்றே சிலர் அரசியலாக்கி அதில் ஆதாயம் தேடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டுக்கு எந்த நல்லதும் நடந்துவிடக்கூடாது என்று சில கூட்டங்கள் கங்கணம் கட்டிக்கொண்டு, வேலை செய்கின்றன.

எல்லாவற்றையும் விமர்சனம் செய்ய வேண்டும், எல்லாவற்றையும் கெடுதல் என்று சொல்ல வேண்டும். இந்தியாவின் துரதிர்ஷ்டவசமாக வைகோவும், ஸ்டாலினும் உள்ளனர். இவர்களை போன்ற எதிர்மறை கருத்துடைய தலைவர்கள் மற்ற மாநிலங்களில் கிடையாது. ராஜபக்சே குற்றவாளி என்றால் அவர்களுக்கு உதவிய காங்கிரஸும் குற்றவாளி தான். காங்கிரஸுக்கு உதவியாக இருந்த திமுகவும் குற்றவாளி தான். அவர்களின் கூட்டாளியாக இருக்கக்கூடிய வைகோவும் குற்றவாளி தான்.

தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்கள் சந்திப்பு

மத்திய அரசு கொண்டு வரும் அனைத்து திட்டங்களும், மக்கள் நலனுக்காகவும், நாட்டில் எங்கெல்லாம் குறைபாடு இருக்கிறதோ அதையெல்லாம் நிவர்த்தி செய்வதற்காகத்தான். எல்லா இடங்களிலும் ஏரிகள் தூர் வாரி இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை அதை அரசாங்கம் தீவிரப்படுத்த வேண்டும். அதிமுக கூட்டணியில் தான் இருக்கிறோம்; தேர்தல் வரும் பொழுது தான் கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்” எனத் தெரித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details