தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

15 லட்சம் ரூபாய் தருவதாக சொன்னது மக்களின் புரிதலுக்கானது -இல.கணேசன் - கமலாலயம்

சென்னை: 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் அறிக்கையில் 15 லட்சம் ரூபாய் தருவதாக பாஜக சொன்ன கருத்து மக்களின் புரிதலுக்கானது என அக்கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

பாஜக மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன்

By

Published : Apr 7, 2019, 3:12 PM IST

சென்னை கமலாலயத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், ஒவ்வொருவர் கணக்கிலும் அன்றைய தினம் 1,162 ரூபாய் கடன் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தோம். அந்தக் கடனை திருப்பி செலுத்த யாரும் முன்வரவில்லை எனக் குறிப்பிட்டார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

  • இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது அவரசநிலை பிரகடனம் செய்யப்பட்டு ஆர்.எஸ்.எஸ். உட்பட தமிழ்நாட்டு தலைவர்கள் பாதிக்கப்பட்டனர்.
  • காங்கிரஸ் கட்சிக்கு அடக்கி ஆளும் தன்மை இருக்கிறது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பாதுகாப்புப் படை வீரர்களுக்கு நாம் தரும் பாதுகாப்பை ரத்து செய்வோம் எனக் கூறுகிறது.
  • சோனியா குடும்பம் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக சட்டத்திருத்தம் கொண்டு வருவோம் எனத் தெரிவிக்கிறது.
  • காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சர்வாதிகாரப் போக்கை கடைப்பிடிக்கும்.
  • பாசிச ஆட்சியைக் கொண்டு வர காங்கிரஸ் முயல்கிறது.
  • அவசரநிலைப் பிரகடன காலத்தில் அடக்கப்பட்ட திமுக அதே காங்கிரஸ் கட்சியில் கூட்டணி வைத்துள்ளது.
  • காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது போல், ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் தருவது நடைமுறைக்குச் சாத்தியமானது அல்ல.
  • 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் அறிக்கையில் 15 லட்சம் ரூபாய் தருவதாக பாஜக சொன்ன கருத்து மக்களின் புரிதலுக்கானது

பாஜக தேர்தல் அறிக்கை இன்றோ நாளையோ வெளிவர இருக்கிறது. வரும் 9ஆம் தேதியும் 13ஆம் தேதியும் மோடி தமிழ்நாடு வருகிறார் எனவும் தெரிவித்து தனது பேட்டியை நிறைவு செய்தார்.

பாஜக மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன்

ABOUT THE AUTHOR

...view details