இது குறித்து தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கட்டடக்கலை பொறியியல் ( B.Arch) கல்வி பயில விரும்பும் மாணவர்கள் பொறியியல் கல்வி சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம்.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், பல்வகை தொழில்நுட்பக் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை உள்ளடக்கிய 46 பொறியியல் சேர்க்கை உதவி மையங்கள் உதவியால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வழிகாட்டுதல் வழங்கப்படும்.