சட்டப்பேரவையில் பேசிய ஸ்டாலின், "கொளத்தூர் தொகுதியில் ரூ.93 கோடி செலவில் 60 கிலோ மீட்டருக்கு தூரத்திற்கு புதைவட கம்பிகள் பதிக்கும் பணிகள் நடைபெறுகிறது. அதேபோல பெரம்பூர் தொகுதியிலும் 600 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.209 கோடி செலவில் பணிகள் நடக்கிறது.
'ஓராண்டுக்குள் புதைவட கம்பிகள் பதிக்கும் பணியை முடிங்க..!' - ஸ்டாலின் வலியுறுத்தல்! - stalin
சென்னை: "மின்கசிவினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க, பருவமழை தொடங்கும் முன்பே புதைவட கம்பிகள் பதிக்கும் பணிகளை முடிக்க வேண்டும்" என, எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
இந்த பணிகள் முடிய 2 ஆண்டுகள் ஆகும் என தெரிகிறது. ஆனால் பருவ மழை தொடங்குவதற்கு முன்பே விபத்துகளை தடுக்க, ஓராண்டுக்குள் புதைவட கம்பிகள் புதைக்கும் பணியை முடிக்கவேண்டும்" என்று வலியுறுத்தினார்.
இதற்கு பதில் அளித்த மின்சார துறை அமைச்சர் தங்கமணி, "கொளத்தூர் தொகுதியில் ஓராண்டுக்குள் பணிகள் முடிந்துவிடும். பொதுவாக புதைவட பணிகள் இரவு நேரங்களில் தான் நடைபெறுகிறது. கொளத்தூர் தொகுதியில் 90 சதவீத பணிகள் முடிந்துள்ளதால் இந்தாண்டுக்குள் முடிந்துவிடும். பிற தொகுதியில் பணிகள் முடிய 2 ஆண்டுகள் ஆகும். சென்னையை பொறுத்தவரை ரூ.2567 கோடி செலவில் 6532 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதைவட கம்பிகளை பதிக்கும் பணிகள் 2021 க்குள் முடியும்" என்றார்.