அம்பத்தூர் காவல் மாவட்டம் சார்பில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் காவல்துறை இணைந்து மக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்று கொடி அணிவகுப்பு நடத்தினர்.
ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு - army and police march fast
சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி துணை ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையினர் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டுமென கொடி அணிவகுப்பு நடத்தினர்.
![ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/768-512-2744573-580-061cd43a-2d6b-4d4f-8455-85635975ee36.jpg)
அணிவகுப்பிற்கு அம்பத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையாளர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். இந்த அணிவகுப்பு அம்பத்தூர் பேருந்து நிலையத்தில் தொடங்கி வடக்கு பூங்கா சாலை வழியாக அம்பத்தூர் நகரின் மிக முக்கிய பிரதான சாலை புதூர் வழியாக ராக்கி திரையரங்கம் வரை சுமார் 4 கிலோ மீட்டர் அணிவகுப்பு நடத்தப்பட்டது.
அணிவகுப்பில் 100க்கும் மேற்பட்ட துணை ராணுவத்தினர் மற்றும் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பங்கேற்றனர். இதில் காவல் உதவி ஆணையாளர் கண்ணன், அம்பத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் பொற்கொடி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் காவல் உதவி ஆணையாளர் கண்ணன் அம்பத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி பொற்கொடி ஆகியோர் கலந்து கொண்டனர்.