அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளராக இருந்த பேராசிரியர் குமாரின் பதவிக்காலம் ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து புதிய பதிவாளராக (பொறுப்பு) அண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கருணாமூர்த்தியை துணைவேந்தர் சூரப்பா நியமித்துள்ளார். இவர் இன்று காலை பதிவாளராகப் பெற்றுக்கொண்டார்.
அண்ணா பல்கலை பதிவாளராக கருணாமூர்த்தி பொறுப்பேற்பு - new registrar
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய பதிவாளராக பேராசிரியர் கருணாமூர்த்தி இன்று பொறுப்பேற்றார்.
அண்ணா பல்கலை. பதிவாளராக கருணாமூர்த்தி பொறுப்பேற்பு
பேராசிரியர் கருணாமூர்த்தி அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாகத்தில். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் 1985ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்ற குழு உறுப்பினராகவும் இவர் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது