பிரபல வில்லன் நடிகரான ஆனந்தராஜ் சென்னை நுங்கம்பாக்கத்தில் அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,
'நான் நோட்டா வேட்பாளன் என்ற அறிவித்ததில் இருந்து மிகச் சிறந்த வரவேற்பும், மரியாதையும் கிடைத்துள்ளது.
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சேலம் எட்டு வழிச்சாலை, மீத்தேன் திட்டம் , ஏழு பேர் விடுதலை குறித்து பேசி இருக்கிறார். இதைப் பற்றி தமிழ்நாட்டு மக்களிடம் முதலில் கருத்துக் கேளுங்கள்.
நமது உரிமையை பாதுகாக்க தேர்தல் ஆணையம் கொடுத்து இருக்கின்ற நோட்டா சின்னத்துக்கு வாக்களியுங்கள்.
ஆட்சியில் இருப்பவர்கள் மத்தியில் உள்ளவர்களுடன் சமாதானமாக போய்க்கொண்டு இருக்கின்றனர். இதைப் பற்றிக் கேட்டால் கூட்டணிக் கணக்கு என்று சொல்கிறார்கள்.
நான் நோட்டாவுக்காக பரப்புரை செய்யப் போகிறேன் என்பதை அறிந்து தமிழ்நாடு சுதந்திர வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் என்னுடைய தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.
இனி மக்கள் கருத்து இல்லாமல் எந்தத் திட்டமும் கொண்டு வரக்கூடாது. சேலம் எட்டு வழிச்சாலை திட்டம் கொண்டு வரப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது, இதற்கு மருத்துவர் ராமதாஸ் எதுவும் கூறாமல் இருக்கிறார்' என தெரிவித்தார்.