சட்டமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் அமமுக படுதோல்வி அடைந்ததை அடுத்து அக்கழக மேல்மட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அதிருப்தியில் இருந்தனர். இதையடுத்து அக்கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர், திமுக மற்றும் அதிமுகவில் இணைந்து வருகின்றனர்.
அமமுக புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு! - DTV DHINAKARAN
சென்னை: அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் புதிய நிர்வாகிகளின் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ளார்.
மேலும் டி.டி.வி. தினகரன் பெரிதும் நம்பிய செந்தில்பாலாஜி, தங்க தமிழ்செல்வன் ஆகியோர் திமுகவில் ஐக்கியமாகினர். இதனையடுத்து கழகத்தின் புதிய நிர்வாகிகளை டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளார். அதில் முன்னாள் அமைச்சர்கள் பழனியப்பனுக்கும், ரெங்கசாமிக்கும் கழக துணைப் பொதுச்செயலாளர்களாக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பொருளாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல், தலைமை நிலையச் செயலாளராக மனோகரன், கொள்கை பரப்பு செயலாளராக சி.ஆர் சரஸ்வதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.