இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “வெளிநாடுகளில் மருத்துவம் படித்துவிட்டு வருகிறவர்களுக்கு வேண்டுமானால் நெக்ஸ்ட் (NEXT-National Exit Test) நுழைவுத்தேர்வுகளைக் கொண்டு வரலாமே தவிர, இந்தியாவிலேயே படிப்பை முடிக்கிறவர்களுக்கு புதிதாக மற்றொரு நுழைவுத்தேர்வு வைப்பது, நம்முடைய கல்வி முறையின் மீது நமக்கே நம்பிக்கை இல்லாததன் வெளிப்பாடாகும்.
கல்விமுறையின் மீதுள்ள நம்பிக்கை சிதைந்துவிடும்..! தினகரன் - அமமுக
சென்னை: மருத்துவப் பட்டப்படிப்பு(MBBS) முடித்தவர்கள் மருத்துவராகப் பணி புரிவதற்கும், மருத்துவத்துறையில் பட்ட மேற்படிப்பு பயில்வதற்கும் நெக்ஸ்ட் (NEXT-National Exit Test) என்ற நுழைவுத் தேர்வை மத்திய அரசு கொண்டுவந்திருப்பது சரியான நடவடிக்கை அல்ல என, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன்
இதன்மூலம் மருத்துவத்துறை மேற்படிப்புகளுக்கும், ஆராய்ச்சிகளுக்கும் செல்பவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து விடும். சாதாரண கிராமப்புற மாணவர்களின் மருத்துவர் கனவைச் சிதைத்திருக்கிற நீட் தேர்வு போல, மருத்துவத்துறையில் உயர் படிப்புகளைப் படித்துச் சாதிக்க நினைப்பவர்களுக்கு 'நெக்ஸ்ட்' தேர்வு தடையாகவே அமையும். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு மத்திய அரசு புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கிற இத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.