தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அட்சய திருதியை... வியக்க வைக்கும் விஷயங்கள் - பாகம் 1

அட்சய திருதியையின் முக்கியத்துவத்தையும், பெருமைகளையும் `பவிஷ்யோத்தர-புராணம்‘ விரிவாக விவரிக்கிறது. அட்சய திருதியை குறித்த அபூர்வ விஷயங்கள் பற்றி காணலாம்.

akshaya thiruthiyai secrets matters

By

Published : May 7, 2019, 9:39 AM IST

Updated : May 7, 2019, 1:05 PM IST

அட்சய திருதியை அன்று நகைக்கடைகளில் நகை வாங்குபவர்களின் கூட்டம் அலைமோதும். அப்படி அலைமோதும் மக்களின் பார்வைக்காக அட்சய திருதியை குறித்து வியக்க வைக்கும் விஷயங்களை வைக்கிறோம். பின்வருமாறு:

  • அட்சய திருதியை தினத்தன்றுதான் கிருதயுகம் பிறந்தது.
  • கங்கை நதி பூமியை முதன் முதலில் அட்சய திருதியை தினத்தன்றுதான் தொட்டது.
  • வனவாச காலத்தில் பாண்டவர்கள் அட்சயப் பாத்திரம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான்.
  • அட்சய திருதியை நாளில்தான் மணிமேகலை அட்சய பாத்திரம் பெற்றாள்.
  • அட்சய திருதியையின் முக்கியத்துவத்தையும், பெருமைகளையும் `பவிஷ்யோத்தர-புராணம்‘ விரிவாக விவரிக்கிறது.
  • அட்சய திருதியை தினத்தன்றுதான் ஐஸ்வர்ய லட்சுமி, தான்ய லட்சுமி அவதாரங்கள் நிகழ்ந்தன.
  • அட்சய திருதியை தினத்தன்றுதான் குபேரன் - நிதி கலசங்களை பெற்றார்.
  • சிவபெருமான் அன்னபூரணியிடம் பிட்சாடனராக வந்து யாசகம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான்.
  • ஸ்ரீரங்கம் கோயில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்
  • பராசக்தியின் ஒரு அம்சமான சாகம்பரிதேவி இந்த உலகில் காய்கறிகளையும், மூலிகைச் செடிகளையும் உருவாக்கியவர் என்று புராணம் சொல்கிறது. அட்சய திருதியை தினத்தன்றுதான் அவர் காய்கறி, மூலிகைகளை உருவாக்கினார்.
  • அட்சய திருதியை தினத்தன்றுதான் விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமர் அவதரித்தார்.
  • ரோகிணி நட்சத்திர நாளில் வரும் அட்சய திருதியை மிக, மிக சிறப்பு வாய்ந்ததாகும்.
  • அட்சய திருதியை நாளில்தான் விநாயகருக்கு மகாபாரதத்தை வியாசர் போதித்தார்.
  • வடமாநிலங்களில் அட்சய திருதியை தினத்தன்று திருமணம் நடத்துவதை புனிதமாகக் கருதுகிறார்கள்.
  • ஹரியானா, பஞ்சாபில் அதிகமாக உள்ள ஜாட் இனத்தவர்கள் அட்சய திருதியை தினத்தன்று மறக்காமல் மண்வெட்டி எடுத்துக் கொண்டு வயலுக்குச் செல்வார்கள்.

மேலும், பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை இனிவரும் பாகங்களில் காணலாம்.

Last Updated : May 7, 2019, 1:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details