கட்டாய தலைகவசம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்கும் அரசையும், துணைநிலை ஆளுநரையும் கண்டித்து புதுச்சேரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஹெல்மெட்டை கையில் வைத்தபடி கண்டன கோஷங்களை எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஹெல்மெட்டை உடைத்து அதிமுக எம்எல்ஏ.,க்கள் திடீர் போராட்டம்! - struggle
புதுச்சேரி: புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் அதிமுக எம்எல்ஏ.,க்கள் அன்பழகன், வையாபுரி, மணிகண்டன், பாஸ்கர் ஆகியோர் தலைகவசங்களை உடைத்து, கட்டாய ஹெல்மெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபடும் எம்.எல்.ஏக்கள்
இதனை அங்கு பணியில் இருந்த பாதுகாவலர்கள் தடுக்க முயன்றனர். அதனை மீறி சட்டமன்ற உறுப்பினர்கள் ஹெல்மெட்டை ஆவேசமாக உடைத்தனர். சட்டமன்ற உறுப்பினர்களின் திடீர் போராட்டத்தால், சட்டப்பேரவை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.