தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அக்னி நட்சத்திரம் இன்று தொடக்கம்: வழக்கத்தைவிட வெப்ப நிலை அதிகரிக்கும்! - அக்னி நட்சத்திரம் இன்று தொடக்கம்

சென்னை: தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் இன்று முதல் தொடங்குவதால், அனல் காற்று வீசுவதுடன் வழக்கத்தை விட வெப்பமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

அக்னி நட்சத்திரம் இன்று தொடக்கம்: வழக்கத்தைவிட வெப்ப நிலை அதிகரிக்கும்!

By

Published : May 4, 2019, 10:20 AM IST

சூரியனுக்கு அருகில் வான்வெளியில் மேஷம் என்னும் நட்சத்திர மண்டலப் பகுதி வருவதையே வெப்பம் மிகுந்த காலமாக உணர்கிறோம். இந்தக் காலகட்டத்தை அக்னி நட்சத்திரம் அல்லது கத்திரி வெயில் எனக் கூறுகிறோம்.

அதன்படி அக்னி நட்சத்திரம் இன்று தொடங்கி மே 29ஆம் தேதி வரை நீடிக்கவுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில், அடுத்த மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீசும் எனச் சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.

அக்னி நட்சத்திரம் இன்று தான் தொடங்கியிருந்தாலும், தமிழ்நாட்டில் சில பகுதிகளில் ஏற்கனவே சதத்தைத் தாண்டி வெயில் போய்க் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details