தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை-சேலம் எட்டு வழிச்சாலை வழக்கில் ஏப்ரல் 8ஆம் தேதி தீர்ப்பு! - சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டம்

சென்னை-சேலம் இடையேயான எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிரான வழக்குகளில் ஏப்ரல் 8ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது.

8 way road judgement on april 8 in chennai high court

By

Published : Apr 6, 2019, 10:42 AM IST

சென்னை-சேலம் எட்டு வழி பசுமைச்சாலை திட்டத்தை, ரூ.10 ஆயிரம் கோடி செலவில் செயல்படுத்த மத்திய-மாநில அரசுகள் முடிவு செய்தன. இந்த திட்டத்திற்காக நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த எட்டு வழி சாலைத் திட்டத்திற்கு எதிராக, விவசாயிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் முந்தைய விசாரணையின் போது, நிலத்தை கையகப்படுத்த தடை விதித்திருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கிற்கான தீர்ப்பு நீதிபதி சிவஞானம், பவானி அமர்வு முன் வருகிற ஏப்ரல் 8ஆம் தேதி வரவுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details