தென்சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் ஜெயக்குமாரை ஆதரித்து அனைத்து இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் சென்னை சைதாப்பேட்டையில் இன்று பரப்புரை மேற்கொண்டார்.
மீசகார நண்பா... உனக்கு பாசம் அதிகம் டா!
அப்போது பேசிய அவர், "2011 தேர்தலில் இருந்து சமத்துவ மக்கள் கட்சி இதுவரை அதிமுகவுடன் பயணித்துக் கொண்டிருப்பதை தான் பெருமையாக கருதுவதாகவும், 8 ஆண்டுகள் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்து வருவதாகவும், ஜெயலலிதா இல்லாத முதல் தேர்தலை சந்திக்க இருப்பதாகவும் அவர் கூறி உணர்ச்சிவசப்பட்டார்.
சந்தர்ப்பவாத கூட்டணி
இந்தக் கூட்டணியை சந்தர்ப்பவாத கூட்டணி என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறுவதற்கு முன் அந்தக் கூட்டணியில் இருப்பவர்கள் யார் என்று சிந்தித்து பார்க்க வேண்டும் என்றும், அந்த கூட்டணியில் உள்ள வைகோ ஈழத்தமிழர் பிரச்னையின் போது ஸ்டாலினை என்னவெல்லாம் கூறினார் என்பதையும் இணையதள வாயிலாக தெரிந்து கொள்ளலாம் என்றும் கூறினார்.
பேசா பிரதமரை உருவாக்கிய காங்கிரஸ் !
பேசாத ஒரு பிரதமரை உருவாக்கிய பெருமை காங்கிரஸ் கட்சியை மட்டுமே சாரும். மீண்டும் அதுபோல ஒரு பிரதமரை உருவாக்க கூடாது என்பதற்காகவே தாங்கள் பாடுபடுவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் அவர் காங்கிரஸ் கூட்டணியில் பல ஊழல்கள் நடந்துள்ளன என்றும், அதில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் முக்கியமான ஒன்று என்றும் தெரிவித்தார். மேலும், அதில் 1 லட்சத்து 74 ஆயிரம் கோடி ஊழல் செய்தனர், அந்த பணத்தை வைத்துதான் தற்போது ராகுல் காந்தி அறிவித்துள்ள வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு மாதம் 6 ஆயிரம் என்ற முறையில் ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை நிறைவேற்ற இருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.
சமக தலைவர் சரத்குமார் பரப்புரை