தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

10% இட ஒதுக்கீட்டை ஆதரிக்கும் அரசியல் கட்சிகள்!

சென்னை: மத்திய அரசு கொண்டு வந்த 10% இடஒதுக்கீடு மசோதாவினை பாஜக, காங்கிரஸ், புதிய தமிழகம் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஆதரித்துள்ளன.

அனைத்து கட்சிக் கூட்டம்

By

Published : Jul 8, 2019, 10:49 PM IST

Updated : Jul 8, 2019, 11:10 PM IST

முன்னேறிய வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீடு தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்
அனைத்து கட்சிக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடத்தப்பட்டது. இந்த மசோதாவினை பாஜக, காங்கிரஸ், புதிய தமிழகம், தமாகா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட 7 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. கட்சித் தலைவர்களின் கருத்துகள் பின்வருமாறு:

தமிழிசை, பாஜக:

10 சதவீதம் இட ஒதுக்கீடு உயர் சாதியினருக்கு என்று கருதி சமூக நீதிக்கு எதிரானது என்று கண்மூடித்தனமாக எதிர்க்கக் கூடாது. இதன் மூலம் தமிழகத்திற்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்பதால் நாம் ஏன் மறுக்கவேண்டும். தமிழ்நாட்டில் இருக்கும் 69% இட ஒதுக்கீட்டிற்கு எந்த இடையூறும் இல்லாமல் 10% இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்தினால் ஏன் நாம் ஏற்கக் கூடாது.

கே.பாலகிருஷ்ணன், சிபிஎம்:
10% சதவீத இட ஒதுக்கீட்டை 5% உள்ள முன்னேறிய வகுப்பினருக்கு மட்டும் வழங்காமல் அனைத்து பிற்படுத்தப்பட்ட மற்றும் பின்தங்கிய வகுப்பினரின் எண்ணிக்கையைப் பொறுத்து வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள 69% இட ஒதுக்கீட்டுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் செயல்படுத்த வேண்டும்.

கே.எஸ். அழகிரி, காங்கிரஸ்:

69% இட ஒதுக்கீட்டிற்குப் பாதிப்பு ஏற்படாமல் 10% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் வாசன் மற்றும் புதிய தமிழக கட்சித் தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி ஆகியோர், 10% இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை வரவேற்பதாகக் கருத்து தெரிவித்துள்ளனர்.

Last Updated : Jul 8, 2019, 11:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details