அரியலூர் நகரில் தியாகி ஜெயராமன் தெருவில் விஜய் என்பவர் மெக்கானிக் கடை வைத்து நடத்திவருகிறார். இவரது கடையில் சிவா என்பவர் வாட்டர் சர்வீஸ் வேலை செய்துவந்தார்.
இந்நிலையில், சிவா வழக்கம்போல் இன்று (நவம்பர் 02) டூவீலர் ஒன்றுக்கு வாட்டர் சர்வீஸ் செய்வதற்காக சுவிட்சை ஆன் செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சிவா மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.