தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுமையை ஆசைவார்த்தை கூறி ஏமாற்றியவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது! - ariyalur crime news

அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே பள்ளி மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி ஏமாற்றிய நபரை காவல் துறையினர் குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்தனர்.

பிரபாகரன்
பிரபாகரன்

By

Published : Sep 26, 2020, 10:19 PM IST

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூர் கோரியும்பட்டியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மாணவியின் தந்தை அளித்த புகாரின்பேரில் ஜெயங்கொண்டம் காவல் துறையினர் பிரபாகரன் மீது வழக்குப்பதிவு செய்து கைதுசெய்தனர்.

மேலும் இவர் மீது ஏற்கனவே கொலை முயற்சி குற்றம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதால், இவரை குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன், மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்தார்.

அதன்பேரில் மாவட்ட ஆட்சியர் ரத்னா குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கான ஆணை பிறப்பித்தார். இதனையடுத்து காவல் துறையினர் அவரை குண்டர் சட்டத்தின்கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details