அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஸ்ரீ புரந்தான் கிராமத்தைச் சேர்ந்த குமார் (45) என்பவரும், அவரது மகன் காளிதாஸ் என்கின்ற கார்த்திக் (22) ஆகிய இருவரும் இணைந்து, அதே பகுதியில் உள்ள மனவளர்ச்சி குன்றிய 32 வயதான பெண் ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்ததாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து அப்பெண் நான்கு மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும், உடல்நலக் குறைவு ஏற்பட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் சரவணன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.