தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மக்கள் குறைதீர் கூட்டம்: ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயற்சித்த பெண்ணால் பரபரப்பு - ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயற்சித்த பெண்ணால் பரபரப்பு

அரியலூர்: மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் கைக்குழந்தையுடன் வந்திருந்த பெண் மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது.

woman-trying-suicide-at-collectors-office
woman-trying-suicide-at-collectors-office

By

Published : Mar 3, 2020, 10:34 AM IST

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குறிச்சிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெண்ணிலா. ஏழு ஆண்டுகளுக்கு முன் கணவரை இழந்த இவர், தனது இரண்டு குழந்தைகளுடன் தனியாக வசித்து, அப்பகுதியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்துள்ளார்.

இதனையடுத்து ஓராண்டுக்கு முன்பு மறுமணம் முடித்த அப்பெண், கணவருடன் இணைந்து வசித்து வருகிறார். இதனையடுத்து கணவரின் சொந்த வீட்டில் குடியிருந்த வெண்ணிலாவை, அங்கிருந்து வெளியேற்றியதாகவும், முதல் கணவரின் தங்கை வீட்டுக்காரர் தன்னிடம் தொந்தரவு தருவதாகவும், இதனால் குவாகம் காவல் நிலையத்தில் அவர்கள் மீது புகாரளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கபடவில்லை எனவும் கூறப்படுகிறது.

ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயற்சித்த பெண்ணால் பரபரப்பு

இதனால் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வந்திருந்த வெண்ணிலா, கூட்டத்தின் நடுவே தனது பிரச்னைகளை கூறி மருந்தினை குடித்ததால் அங்கு பரபரப்பு நிலவியது. இதனையடுத்து அவரை உடனடியாக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: திடீரென வீட்டை காலி செய்ய சொன்னால் எங்கே செல்வோம் - கிராம மக்கள் வேதனை

ABOUT THE AUTHOR

...view details