அரியலூரைச் சேர்ந்த தேன்மொழி, சென்னையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இதனிடையே உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கடந்த மார்ச் 18ஆம் தேதி அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை பரிசோதித்த பின்பு அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. 28 நாட்களுக்குப் பிறகு அவர் குணமாகி தற்போது வீடு திரும்பியுள்ளார். கரோனாவில் இருந்து மீண்டு வந்த அனுபவம் குறித்து நமது ஈடிவி பாரத் செய்திக்கு வாட்ஸ்-ஆப் வழியாக பேட்டியளித்தார். அதில், "தனக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரிந்தபோது மிகவும் பயத்துடன் இருந்தேன்.
கரோனா தொற்றிலிருந்து மீண்ட பெண்ணின் அனுபவம் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டபோது மிகவும் வேதனை அடைந்தேன். அந்தச் சூழ்நிலையில் என்னை நானே தேற்றிக்கொண்டு எனக்கு பிடித்தமான வேலைகளான படம் வரைவது, கவிதை எழுதுவது போன்ற செயல்களில் ஈடுபட்டேன். அப்போது, ஏற்பட்ட மன அழுத்தத்தை நீக்க உறவினர்களுடன் செல்போனில் உரையாடினேன். தனக்குப் பிடித்தமான செயல்களை ஒவ்வொருவரும் வீட்டில் இருந்தபடி செய்துகொண்டு வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கவேண்டும். அது தான் நாட்டுக்கும் நல்லது நமது வீட்டுக்கும் நல்லது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மக்களின் உயிர் காக்கும் மருத்துவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் - வைகோ