அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே இடையார் கிராமத்திற்கு செல்லும் வழியில் ஜமீனுக்கு சொந்தமான கருவேலங்காடு உள்ளது. இங்கு, 50 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் ஆடைகள் களையப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதைப் பார்த்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
அதன்பின் சம்பவ இடம் சென்ற உடையார்பாளையம் காவல் துறையினர், அந்த பெண்ணின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரணை நடத்தி வரும் காவல் துறையினர், அந்தப் பெண்ணின் உடலில் ஆடைகள் களையப்பட்டு இருந்ததால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்திருக்கலாம் என்று கூறினர்.