திமுக தலைவர் ஸ்டாலின் விரும்பினால் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடத் தயார் என்று, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நீட் விவகாரத்தால் தற்கொலை செய்துகொண்ட அனிதாவின் நினைவாக அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்த குழுமூரில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அனிதா நூலகத்துக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்த உதயநிதி ஸ்டாலின், புத்தகங்களை வழங்கி நூலகத்தில் உறுப்பினராக இணைந்துகொண்டார்.