கரோனா பரவல் காரணமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தன. அதன் தொடர்ச்சியாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான காய்கறி சந்தைகள், திரையரங்கு உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டன.
அரியலூரில் கட்டுப்பாடுகளுடன் வாரச்சந்தை திறப்பு!
அரியலூர்: முகக் கவசம் அணிய வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன் அரியலூரில் வாரச்சந்தை திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாநில அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்ததை அடுத்து, அரியலூர் நகராட்சி சார்பில் பேருந்து நிலையம் அருகே உள்ள இடத்தில் வாரச்சந்தை தொடங்கப்பட்டது. பொதுமக்கள் வந்து பொருள்களை வாங்குவதற்காக தகுந்த இடைவெளியுடன் கூடிய வட்டங்கள் வரையப்பட்டன.
மேலும், முகக் கவசம் அணிந்து வந்தவர்கள் மட்டுமே சந்தைக்குள் அனுமதிக்கப்பட்டனர். வாரச்சந்தை மூடப்படுவதற்கு முன்பு 70லிருந்து 80 கடைகள் செயல்பட்டன. ஆனால், தற்போது 30லிருந்து 40 கடைகள் மட்டுமே செயல்பட நகராட்சி அனுமதி அளித்துள்ளது.